உலகம்

வாட்ஸ்ஆப்பின் சேவை நிபந்தனைகளில் புதிய மாற்றம் : நிபந்தனைகளை ஏற்காத வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் – வாட்ஸ்ஆப் அறிவிப்பு

வாட்ஸ்ஆப்-பின் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் ரகசிய காப்பு கொள்கை மற்றும் சேவை நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அனைத்து பயனாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.புதிய மாற்றங்களில், பயனாளர்கள் மெசேஜுக்குள் ஒலி-ஒளி பைல்களை இணைத்து அனுப்பும் போது, அவற்றை என்கிரிப்டட் வடிவத்தில் தனது சர்வர்களில் வாட்ஸ்ஆப் சேமித்து வைக்கும் என்பது முக்கியமானதாகும்.

அதைப் போன்று பேமென்ட் மற்றும் பண பரிவர்த்தனை டேட்டாக்கள், பயனாளர்களின் மொபைல், இருப்பிட விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் புதிய சேவைகளும் நடைமுறைக்கு வர உள்ளன.