அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி- அதிகாரபூர்வ அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ-பைடன் வெற்றிப் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பாக நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் முன்னாள் அதிபர் டிரம்ப் தேர்தலில் மிகப்பெரிய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது எனக் கூறி நீதிமன்றத்திற்கு சென்றார். இதற்கு பைடன், ட்ரம்ப் இப்படி நடந்து கொள்வது சங்கடமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையரிடம் ட்ரம்ப் தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் எனக் கூறியதாக சொல்லும் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ – பைடன் வெற்றிப் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.