வணிகம்

(11-01-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (11-01-2021) ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 4வது வர்த்தக நாளாக சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த 6ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை 39 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இருப்பினும் அதற்கடுத்து வந்த 3 வர்த்தக நாள்களில் தங்கம் விலை படிப்படியாக தொடர்ந்து சரிந்து வந்தது.

இதன்படி நேற்று சவரன் தங்கம் 37 ஆயிரத்து 600 ரூபாயாகவும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4 ஆயிரத்து 700 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் 4வது நாளாக இன்றும் ஒரு கிராம் தங்கம் 38 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 662 ரூபாயாகவும், சவரன் தங்கம் 304 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 296 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இதேபோல் நேற்று 69 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை இன்று 900 ரூபாய் குறைந்து 68 ஆயிரத்து 100 ரூபாயாக விற்கப்படுகிறது.