அரசியல்தமிழ்நாடு

சட்டப்பேரவை தேர்தலை நடத்த தமிழக அரசிடம் 600 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது! – சத்யபிரதா சாஹூ

சட்டமன்ற தேர்தலை நடத்த செலவு தொகையாக 600 கோடி ரூபாயை தமிழக அரசிடம் கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ, கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து வருவதாகவும், பீகாரில் நடைபெற்ற தேர்தல் போன்றும், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.