தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்றும் பல மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
14 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.