இந்தியா

ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1 கோடியை நன்கொடையாக கொடுத்த கவுதம் காம்பீர்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார் பாஜகவின் டெல்லி தொகுதி எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர்.

இது குறித்து பேசியுள்ள அவர் “ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமென்பது ஒவ்வொரு இந்தியனின் கனவு. நல்வாய்ப்பாக அந்தப் பிரச்னை சமூகமாக தீர்க்கப்பட்டு இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ராமர் கோயில் சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கும். எனவே இதில் என்னுடைய குடும்பத்தினரின் பங்கும் இருக்க வேண்டும் என காரணத்துக்குகாக ஒரு சிறிய தொகையை நன்கொடையாக கொடுத்து இருக்கிறேன்” என்றார் கவுதம் காம்பீர்.

மேலும் ராமர் கோயில் கட்டுவதற்கு பொது மக்களிடமிருந்தும் தொகையை நன்கொடையாக திரட்டி வருகிறார் கவுதம் காம்பீர். அதன் மூலம் ரூ.10 முதல் பெரிய தொகையையும் நன்கொடையாக பெற்று வருகிறார். இதில் ரூ.1000க்கு மேல் தருபவர்கள் நன்கொடையை காசோலை மூலமாகவே பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.