உலகம்

புதிய அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே ஜோ பைடனின் 17 அதிரடி உத்தரவுகள்

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முதல் நாளிலேயே 15 அதிரடி உத்தரவுகளுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

புதிய உத்தரவுகளின்படி, அமெரிக்க மக்களை கொரோனாவில் இருந்து காக்கும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ள அரசு, கொரோனாவை கட்டுப்படுத்த புதிய அலுவலகத்தையும் திறப்பதாக கூறியுள்ளது.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஈரான், ஈராக், லிபியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மக்கள் வர விதிக்கப்பட்டிருந்த தடையையும் அதிரடியாக நீக்கப்பட்டு, விசா வழங்கும் பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு இயங்குவதாக டிரம்ப் அறிவித்த கட்டுப்பாடுகளையும், பைடன் தளர்த்தி, மீண்டும் அந்த அமைப்புடன் நல்லிணக்கம் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

2015 பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தை மீண்டும் தொடரவும் பைடன் ஆணையிட்டுள்ளார். பாலினம் மற்றும் நிற,இனவெறிக்கு எதிரான புதிய கோப்புகளுக்கும் பைடன் கையொப்பமிட்டுள்ளார். டிரம்ப்-பை வெற்றி பெற வைத்த அமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுமானப்பணிகளை நிறுத்தி வைக்கும் உத்தரவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.