வணிகம்

(27-01-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (27-01-2021) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 37 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 36,968 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 4,621 ரூபாயாக உள்ளது. அதேபோல வெள்ளி விலையும் இன்று அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 70 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 70,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்த மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்றைய தினத்தில் தங்கம் விலை எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், மகிழ்ச்சியூட்டும் விதமாக இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.