அரசியல்தமிழ்நாடு

சசிகலாவை வரவேற்று திருச்சியில் போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்!

திருச்சியின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக பிரமுகர், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ரா.அண்ணாதுரை சசிகலாவை வரவேற்று திருச்சியின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியிருந்தார்.

இந்நிலையில் கட்சியின் கொள்கை கோட்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகவும் கூறி அண்ணாதுரையை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.