உலகம்

இந்தியா – அமெரிக்கா உறவை வலுப்படுத்த இரு நாட்டு உயர்மட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை

அமெரிக்கா – இந்தியா உறவை மேலும் வலுப்படுத்த இருநாடுகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடைபெற்ற இந்த இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டின், இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் தொலைபேசி மூலம் பேசினார்.

பன்முக பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்த, ஒன்றிணைந்து பணியாற்றுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்வார்த்தை நடத்தினர்.