அரசியல்தமிழ்நாடு

இன்று மாலை 4.30 மணிக்குத் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழகச் சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் பிப்ரவரி இரண்டாம் நாள் தொடங்க உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள கூட்டம் என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

துறைவாரியாகச் செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்வதுடன், புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.