தமிழ்நாடு

”பிப்ரவரி 7ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா”

பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா 7ம் தேதி தமிழகம் வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்தார்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்ததால் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 27 ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனைக் காலமான 4 ஆண்டுகாலம் முடிந்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பிறகும் சிகிச்சையை தொடர்ந்த சசிகலா பெங்களூருவில் உள்ள இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா 7ம் தேதி தமிழகம் வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளவர்கள், சசிகலா பக்கம் இருக்கிறார்கள் என மதுரையில் நடந்த திருமண விழாவில் பேசிய தினகரன் தெரிவித்தார்.