இந்தியா

மும்பை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது தண்ணீர் என நினைத்து சானிட்டைசரை குடித்த உதவி ஆணையர்!

மும்பை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது உதவி ஆணையர் தண்ணீர் என நினைத்து சானிட்டைசரைக் குடித்த சம்பவம் அரங்கேறியது.

மும்பை மாநகராட்சியில் அடுத்த நிதியாண்டுக்கான 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை ஆணையர் இக்பால் சிங் சகல் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிக்கொண்டிருந்தபோது உதவி ஆணையர் ரமேஷ் பவார் தனக்கு முன் இருந்த பாட்டிலை எடுத்துத் தண்ணீர் என நினைத்துக் குடித்தார்.

அது சானிட்டைசர் எனத் தெரியவந்ததும் பின்னர் அதை வெளியே கக்கினார்.