தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும் இன்று கல்லூரிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் இன்று முதல் முழு அளவில் செயல்பட்டு வருகின்றன.

இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியுள்ளன.

கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளமோ என கல்லூரிகள் முழு அளவில் செயல்பட்டு வருகின்றன.

வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் கல்லூரிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.