உலகம்

விண்வெளியில் புதிய சாதனை படைத்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் கனவு திட்டமான ஹோப் ப்ரோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சாதனை படைத்து உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் ஹோப் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் 7 மாத தொடர் பயணத்திற்கு பின் செவ்வாய் கிரக புவி வட்ட பாதையை நேற்று ஹோப் விண்கலம் அடைந்தது. இதனை அறிந்த விஞ்ஞானிகள் மற்றும் அரச குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஐரோப்பாவை தொடர்ந்து 5-வது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்து உள்ளது.