தமிழ்நாடு

தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வருகிற 14ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 14ம் தேதி வருகை தருகிறார்.

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது, மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டல் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சென்னை கடற்கரை – அத்திப்பட்டு 4-வது ரெயில் பாதை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் வழிதடங்களில் மின்மயக்கப்பட்ட ரெயில் பாதைகளை நாட்டுக்கு அப்பணிக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விழாவாக நடைபெறும் இதில் ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அர்ஜுன் மார்க்-2’ என்னும் புதிய வகை பீரங்கியை பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.