பி.சி.சி.ஐ. நடத்திய உடற் தகுதி தேர்வில் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 6 வீரர்கள் தோல்வி!
பி.சி.சி.ஐ. நடத்திய 2 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தய உடற் தகுதி தேர்வில் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் உட்பட 6 வீரர்கள் தோல்வியுற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாகவும், அவர்களின் உடற்தகுதியை மேம்படுத்தவும் பி.சி.சி.ஐ. 2 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பந்தயத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க இயலாமல், சஞ்சு சாம்சன், ராகுல் தீவெட்டியா, இஷான் கிஷான், நிதிஷ் ரானா, சித்தார்த் கவுல், ஜெய்தேவ் ஆகியோர் தோல்யடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.