இந்தியா

மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டில், 15-வது தவணையாக 6 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியது மத்திய அரசு

மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டில், 15-வது தவணையாக 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதில் 5,516 கோடியே 60 லட்சம் ரூபாய் 23 மாநிலங்களுக்கும், 483 கோடியே 40 லட்சம் ரூபாய் டெல்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இது வரை, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களுக்கு நிதி அமைச்சகம் வழி வகுத்துள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரத்து 627 கோடி ரூபாய் கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.