அரசியல்தமிழ்நாடு

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு குறைந்த தொகுதிகளே கிடைக்கும் – வைகோ

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு குறைந்த தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்படக்கூடும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்‍.

மதுரையில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவரிடம், 1 கோடியே 7 லட்ச ரூபாய் நிதியை அந்த கட்சியின் நிர்வாகிகள் ஒப்படைத்தனர். பின்னர் விழாவில் பேசிய வைகோ,நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் திமுக ஒதுக்கீடு செய்யக்கூடிய இடங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையிலே மதிமுக உள்ளதாகக் கூறினார்‍.

தனது மகன் இத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என அவர் திட்டவட்டமாகக் கூறினார்‍.