இந்தியா

OTT தளங்களை எப்படி முறைப்படுத்த போகிறீர்கள்? ; உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற OTT தளங்களை முறைப்படுத்த அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

OTT தளங்களில் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் நிறைந்த தொடர்களும், திரைப்படங்களும் தொடர்ந்து ஒளிபரப்பபடுவதால், அவற்றை அரசு முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில் வழக்கறிஞர்கள் இரண்டு பேர், சுதந்திரமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, இந்த தளங்களை முறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.