(20-02-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (20-02-2021) சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் 35 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.35,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த 2 நாள்களாக விலை குறைந்து வந்தது. எனினும் இன்று (20-02-2021) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதன் தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை விலை ரூ.35 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ,ரூ.35,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து, ரூ.4,376 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, ரூ.73.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.73,800 ஆகவும் விற்பனையாகிறது.