தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றிலும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.