தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.