தமிழ்நாடு

ரூ.2181 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் சார்பில் 2181 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

சென்னை தீவுத்திடல் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூவம் கரையோரம் 4 லட்சத்து 53 ஆயிரம் தாவரங்கள் நடவு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 906 கோடி ரூபாய் மற்றும் பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் 24 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.