விளையாட்டு

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைத்தார் தமிழக வீரர் அஸ்வின்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்தார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற பகல்- இரவு டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் அவர் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 599 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 4-வது இடத்தை அவர் பிடித்தார். கும்ப்ளே 953 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த படியாக ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், கபில்தேவ் 687 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.