தமிழ்நாடு

தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் நல்ல பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி உரை

ரூ.12,400 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரை

தமிழில் “வணக்கம்” எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடி விழா உரையைத் தொடங்கினார்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம், தொழுதுண்டு பின் செல்பவர் என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் உரை

தமிழ்நாட்டிற்கு நல்ல பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்: பிரதமர்

பவானிசாகர் அணை விரிவாக்கம் திட்டம், தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு மேம்பாடு அளிக்கும் திட்டம் ஆகும்: பிரதமர்

பவானிசாகர் அணை விரிவாக்கம் திட்டத்தால், 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்: பிரதமர்

இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது: பிரதமர்

தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியம் தடையில்லா மின்சாரம் ஆகும்: பிரதமர்

4 மாவட்டங்களில் 709 மெகாவாட் திறன் கொண்ட ரூ.3000 கோடி மதிப்பீட்டிலான சூரிய மின் சக்தி திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்

ரூ.8000 கோடி மதிப்பீட்டில் நெய்வேலியில் 1000 மெகாவாட் திறன் புதிய அனல் மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது

புதிதாக தாம் தொடங்கி வைத்த மின் திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65% தமிழ்நாட்டிற்கே வழங்கப்படும்

துடிப்பு நிறைந்த இந்திய கப்பல் போக்குவரத்தின் முன்னோடியாக திகழ்கிறவர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பல் போக்குவரத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தொலைநோக்கு பார்வை நமக்கு உத்வேகம் அளிக்கிறது

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மப்பேடு அருகே சாகர் மாலா திட்டத்தின் கீழ், சரக்கு வாகன நிறுத்தப் பூங்கா தொடங்கப்பட உள்ளது

வளர்ச்சியும், சுற்றுச்சூழல் மீதான ஆர்வமும், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை: பிரதமர்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்பட்டுள்ளது: பிரதமர்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், 140 கிலோவாட் சூரியமின்ஆற்றல் திட்டப் பணிகள் நடைபெறுகிறது: பிரதமர்

இதன்மூலம், தூத்துக்குடி துறைமுகத்தின் மொத்த மின்தேவையில் 60% நிறைவு செய்ய உதவும்: பிரதமர்

தனிநபரின் கண்ணியத்தை, சுயமரியாதையை உறுதி செய்வது வளர்ச்சியின் மையக்கருவாகும்: பிரதமர்

தமிழ்நாடு மிகப்பெரும் நகர்புறமயமாக்கலை கொண்டிருக்கும் மாநிலம் ஆகும்: பிரதமர்