ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்த ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி
ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் பிடித்துள்ளார்.
இது வரை இந்த இடத்தில் இருந்த சீனாவின் வாட்டர் பாட்டில் வர்த்தகர் ஜோங் ஷான்சானுக்கு இந்த வாரம் 20 சதவிகித வர்த்தக இழப்பு ஏற்பட்டது.
இதனால் அவரது சொத்து மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்து, நிகர சொத்து மதிப்பு 5 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக சரிந்தது.
இதனால், 5 லட்சத்து 84 ஆயிரம் கோடி சொத்து மதிப்புள்ள அம்பானி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.