தமிழ்நாடு

புதிய கட்சியைத் தொடங்கும் அர்ஜுன மூர்த்திக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

புதிய கட்சியைத் தொடங்கும் அர்ஜுன மூர்த்திக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்த ரஜினிகாந்த தனது கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போதே அர்ஜுன மூர்த்தி பாஜகவை சேர்ந்தவர் என சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இதையடுத்து அர்ஜுன மூர்த்தி புதிய கட்சியை இன்று தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று தனி அரசியல் கட்சித் தொடங்கி இருக்கும் அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.