தமிழ்நாடு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்..! அமைச்சர்களுக்கு சபாநாயகர் தனபால் கட்டுப்பாடு

சட்டசபையில் அமைச்சர்கள் பதில் சொல்லும்போது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு உட்பட்டு பதில் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. என்றாலும் சட்டசபை கூட்டம் நடத்தும் தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்ததால் இன்று கூட்டம் நடந்தது.

வழக்கம் போல் காலை 10 மணிக்கு அவை கூடியதும் சபாநாயகர் தனபால், அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இதில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது என்றும் சபையில் அமைச்சர்கள் பதில் சொல்லும்போது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு உட்பட்டு பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.