அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அப்சரா ரெட்டி விருப்பமனு தாக்கல்
அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 24 ஆம் தேதி துவங்கி இன்று 6வது நாளாக விநியோகிக்கப்படடு வரும் விருப்ப மனுக்களை அக்கட்சியினர் ஆர்வத்துடன் பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
இன்றைய தினம் அதிமுகவின் செய்தித்தொடர்பாளரும் திருநங்கையுமான அப்சரா ரெட்டி உள்ளிட்டோர் விருப்ப மனு வழங்கினர்.