மதுரவாயல்-வாலாஜா சாலையில் 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
மதுரவாயல் – வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மதுரவாயல் – வாலாஜா தேசிய நெடுஞ்சாலை முறையாகப் பராமரிக்கப்படாததால் அங்குள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனால் தினமும் 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதால் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய சாலைப் போக்குவரத்து துறை செயலாளரை மதுரவாயல் – வாலாஜா தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பயணித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தெரிவித்தனர்.