தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில், மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 482 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்று, 5 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 180 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
28 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.