புதிய கட்சி தொடங்கப் போவதில்லை – டொனால்ட் டிரம்ப்
தான் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், தங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளதென்றும், அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளதாகவும் கூறினார். புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் போலியானது என்று கூறிய அவர், அமெரிக்க சட்டங்களை அமல்படுத்துவதில் பைடன் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், ஜனநாயக கட்சியினரை மூன்றாவது முறையாக, டுத்த தேர்தலில் தோற்கடிக்க தனக்கு வாய்ப்பு ஏற்படலாம் என்றும் டிரம்ப் பேசினார்.