தமிழ்நாடு

நாமக்கல்லில் முட்டையின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.20 ஆக விற்பனை

நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் விலை 20 காசுகள் வரை குறைந்து 4 ரூபாய் 20 காசுகள் ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி 4 ரூபாய் 40 காசுகளாக இருந்த ஒரு முட்டையின் விலை 5 நாட்களுக்குப் பிறகு தற்போது குறைந்துள்ளது.

இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் குறிப்பிடுகையில், வடமாநிலங்களில் முட்டையின் தேவை கடந்த மாதம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறைந்ததால் இங்கு முட்டையின் விலை குறைந்ததாக தெரிவித்தனர்.