உலகம்

ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ஆர்க்டிகா-எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா

ஆர்டிக் கண்டத்தில் நிகழும் சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்காணிக்க ரஷ்ய விண்வெளித் துறை ஆர்க்டிகா- எம் என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்டிக் கண்டத்தில் பெரிய பனிப் பாறை உருகும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியானது.

இந்த நிலையில் ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ரஷ்ய விண்வெளித் துறை ஆர்க்டிகா- எம் என்ற செயற்கைகோளை உருவாக்கியது.

கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து, சோயூஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைகோள் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக ரஷ்ய விண்வெளித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.