(03-03-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.
22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் 22 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரண தங்கம் 34 ஆயிரத்து 112 ரூபாயாக உள்ளது.
வெள்ளியைப் பொறுத்தவரை, கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.