அரசியல்தமிழ்நாடு

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்றுடன் முடிவடைகிறது.

கடந்த 24ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வரும் நிலையில், அதனை வாங்குவதிலும்,தாக்கல் செய்வதிலும் அதிமுகவினர் அதிக ஆர்வம் காட்டினர்‍.கடந்த 7 நாட்களில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது. விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை ஒரேகட்டமாக நேர்காணல் நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.