அரசியல்

ராகுல் அவர்களே நீங்கள் பாசிசத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதை போல உள்ளது – காயத்திரி ரகுராம்

நீங்கள் பாசிசத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதை போல உள்ளது என ராகுல் காந்தியை ட்விட்டர் பதிவின் மூலம் கடுமையாக விமர்சித்துள்ளார் காயத்திரி ரகுராம்

இதுகுறித்து ட்விட்டர் பதிவில் அவர் கூறிருப்பதாவது : காங்கிரஸ் கட்சி பாசிசத்திற்கு மாற்று என்று கூறும் ராகுல் அவர்களே ! நீங்கள் ஈழத்தில் ஒன்னரை இலட்சம் தமிழர்களை மட்டுமா கொன்று குவித்தீர்கள்! நீங்கள் பேசிய கன்னியாகுமரிக்கு பக்கத்தில் வெள்ளியோடு பகுதியில் உங்கள் பாட்டி இந்திராகாந்தி கைது செய்யப்பட்டதற்காக கர்ப்பினி பெண் உட்பட 9பேரை கொடூரமாக எரித்து கொன்றீர்கள் ,தமிழர்களை மட்டுமல்ல ஆயிரகணக்கான சீக்கியர்களையும் அல்லவா கொன்றீகள் , நீங்கள் பாசிசத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதை போல உள்ளது!!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்