இந்தியா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது – கெஜ்ரிவால் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே திமுக சார்பில் ஸ்டாலின், உதயநிதியும், அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இப்போது இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

டெல்லியில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும், என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி போட்டியிடாது என தெரிவித்துள்ளார்.