அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் போடி நாயக்கனூர் தொகுதியிலும்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் போட்டியிடுவதாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள முதலாவது வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும் , அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்களான சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், தேன்மொழி நிலக்கோட்டை தனி தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.