வாஷி , பண்ட் அபாரம் 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வாஷி பதிவு செய்துள்ள முன்றாவது அரை சதம் இது. ஆல் ரவுண்டராக இந்திய அணியில் தனது இருப்பை தக்கவைத்து வருகிறார் அவர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கை ஓங்கியிருந்த வேளையில் பண்டுடன் கூட்டணி அமைத்து அணியை முன்னிலை பெற செய்தார் வாஷி.
அவரது பேட்டிங் இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் அடங்கும். இங்கிலாந்து சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சு கூட்டணியை ஒரு கை பார்த்து வருகிறார் வாஷி. இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 101, ரோகித் சர்மா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 60, அக்ஸர் பட்டேல் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3, பென்ஸ்டோக்ஸ் 2, லீக் 2 விக்கெட் சாய்த்தனர்.
இந்திய அணி தற்போது 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3 விக்கெட் மீதமுள்ள நிலையில், இந்திய அணி 350 ரன்களை தாண்ட வாய்புள்ளது.