அரசியல்தமிழ்நாடு

கன்னியாகுமரியில் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை சத்யமூர்த்தி பவனில் விருப்ப மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தந்தை வசந்தகுமாரின் கனவை நிறைவேற்றுவது தனது கடமை என கூறினார்.

ராகுல்காந்தி தமிழகம் வந்தது தொண்டர்களுக்கும், மக்களுக்கும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் விஜய் வசந்த் தெரிவித்தார். இடைத்தேர்தலில் போட்டியிட மேலிடம் வாய்ப்பு கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், வெற்றி வாய்ப்பு நன்றாக இருப்பதாக கூறினார்.