Covid19இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 18 ஆயிரத்து 711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஒரு நாளில் நூறு பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரம், பஞ்சாப், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரேநாளில் புதிதாக 18 ஆயிரத்து 711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 86 விழுக்காடு மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், கர்நாடக மாநிலங்களில் மட்டும் உள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.