திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு
வரும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., முன்வந்ததால்,சில நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டசபை தொகுதிகள், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தொகுதி பங்கீடு மகிழ்ச்சி அளித்துள்ளது. மதசார்பின்மை வெற்றி பெற வேண்டும் என கூட்டணி கட்சிகள் பாடுபட்டு வருகிறது. மதசார்பற்ற தேரை இழுக்க வேண்டும் என்பதால் ஒன்று சேர்ந்துள்ளோம் என கூறினார்.