பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்கள் வழியாக தமிழகம் வருவோருக்கும் இ- பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.’
வணிகரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள்வரை தங்குவோருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .