அரசியல்தமிழ்நாடு

‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்!

விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது

திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் திமுக சார்பில் தேர்தல் இந்த பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது . இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்ல உள்ளார்.

திமுகவின் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்த மாநாட்டில் அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது .