தமிழ்நாடு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மறைவு: முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் ராமேசுவரத்தில் பிறந்தவர். அப்துல் கலாமுக்கு முகமது முத்துமீரான் லெப்பைமரைக்காயர் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள வீட்டில் தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முகமது முத்துமீரான் லெப்பைமரைக்காயர் நேற்று இரவு திடீரென இறந்தார். அவருக்கு வயது 104.

இந்நிலையில் அப்துல்கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் (07.03.2021) அன்று காலமான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.