திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏ-க்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது பவானிபூரில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த 2 முறையும் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பல திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் திங்கள்கிழமை ( இன்று ) பாஜகவில் இணைந்தனர்.
சிங்கூர் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ வாக இருந்த ரவீந்திரநாத் பட்டாச்சார்யா, ஹபிப்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டசரளா முர்மு. முர்முவின் உடல்நலம் கருதி ஹபிப்பூர் தொகுதியின் புதிய வேட்பாளராக பிரதீப் பாஸ்கி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சரளா முர்மு பாஜகவில் இணைந்தார்.
தெற்கில் உள்ள சட்காச்சியாவைச் சேர்ந்த நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்த சோனாலி குஹா,பசிர்ஹத் தக்ஷின் (வடக்கு 24 பர்கானாஸ்) எம்.எல்.ஏ தீபந்து பிஸ்வாஸ்,ஷிபூர் எம்.எல்.ஏ ஜட்டு லஹிரி. பெங்காலி திரைப்பட நடிகை தனுஷ்ரீ சக்ரவர்த்தி ஆகியோர் மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் அவர்கள் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.இந்த வரிசையில் மேலும் ஒரு திரிணமூல் எம்எல்ஏ சிடால் சர்தாரும் பாஜகவில் இணைந்தார்.