அரசியல்தமிழ்நாடு

பெண்களின் நலனுக்கான நிறைய திட்டங்கள் எங்களிடம் உள்ளன – கமல்ஹாசன்

பெண்களின் நலனுக்கான நிறைய திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அந்த கட்சியின் சார்பில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களது திட்டங்களை சொன்னால் காபி தான் அடிப்பார்கள் என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை தாம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.