அரசியல்தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக – விஜயகாந்த் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கூட்டணில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஸ், “இன்றுதான் எங்களுக்கு தீவாவளி” என்றும், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெப்பாசிட் இழக்கும் என்றும் கூறினார்.

அத்துடன், அதிமுகவில் உள்ள கே.பி.முனுசாமி அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார் என்றும், பாமக பொதுச்செயலாளர் போல பணியாற்றுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.